ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.
இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.
சாமியாருக்கு வருத்தம்
"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?"
சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.
அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.
"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"
இப்போது தெரிகிறதா?
செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment