கவிதை பிறந்தது காதலியிடம்தான்....!!!!
கவிதையே எழுத தெரியாத
என்னிடம் வந்து நீ
ரத்தின சுருக்கமாய் ஒரு கவிதை
இப்போதே சொல் என்று அடம் பிடித்தாய்....
நான் என்ன செய்வதென்று
தெரியாமல் படபடத்தேன்
நீ கோபமாக முறைத்து....
செல்லமாக கேட்டாய்....
சொல்லுடா என்று....
நான்
உண்மையை ஒப்புக்கொண்டேன்....
எனக்கு தெரிந்த ஒரே கவிதை....
நீதானடி என்று....
அப்போது நீ நாணத்தால் சிவந்து....
நளினத்தை கடந்து....
உன் கைவிரல்கள் மடித்து....
மெல்லமாய் என் மார்பில் குத்திக்கொண்டு....
செல்லமாய் தோள்களில் தலை சாய்ந்தாய்....
வெள்ளமாய் கவிதை ஊற்றெடுத்தது....
அந்த காட்சி நித்தமும் நினைவில்
வந்து போவதால் நிறுத்தாமல்
தொடர்கிறேன் உனக்கான என் கவிதைகளை....!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment