என் மீது உள்ள
காதலை எல்லாம்
இப்படி கவிதைகளாய்
எழுதி திர்த்துகொண்டிருக்கிராயே,
ஒருவேளை முற்றிலும்
திர்ந்துவிட்டால் என்ன
செய்வாய் என்றாய்??
ஒருவேளை நீ சொல்வது போல்
உன் மீதான என் காதல்
முற்றிலும் திர்ந்துவிட்டால் ,
கண்டிப்பாய்
என் உதிரம் உறைந்து போயிருக்கும்,
என் இமைகள் வேலை நிறுத்தம் செய்திருக்கும்,
என் இருதயம் துடிக்க மறந்திருக்கும் ,
என் மூளை முடங்கி போயிருக்கும் ,
என் விழி நிரந்தரமாய் விழித்தே இருக்கும்,
மொத்தத்தில்,,,,
" சுருக்கமாய் " சொன்னால்
நான் இறந்திருப்பேன்
" விளக்கமாய் " சொன்னால்
என் உடலை விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ,
என் உடலை " மட்டும் "விட்டு விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ....
அப்படியானால் என் பின்னால்
ஆவியாக அலைவாயா ?? என்றாய்....
நீ காதலிப்பதாய் இருந்தால்
இந்த பாவி ,
ஆவியாக அலையவும் தயார்
என்றேன் .....
அதை கேட்டு என் நெஞ்சில்
முகம் சாய்த்து ஆழ ஆரம்பித்தாய்
என் மீது விழுந்த உன் விழி நீர் சூட்டில் உணர்ந்து கொண்டேன் ,,,,
பெருகிகொண்டிருக்கிறது ,,,,
உன் கண்களில் இருந்து
கண்ணீரும் ,,,,
என் மீதான உன் காதலும் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment