March 10, 2010

தோழி....

காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி....!!!
****************************************
தோழி....
தங்கைக்கும்....
காதலிக்கும்....
இடைப்பட்டவள்....!!!
தோழி....
நெருக்கத்துக்கும்....
தூரத்துக்கும்....
இடைப்பட்டவள்....!!!

****************************************

தோழியை கண்டதும்....
நெருக்கமாய் அமர்வாள் காதலி....!!!
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி....!!!

****************************************

பிறந்தநாள் வாழ்த்து....
தொலைபேசியில் சொல்வாள் காதலி....!!!
கைபிடித்து குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழியும்....!!!

****************************************

வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா....
சோறு கொடுத்து அனுப்புவாள்....
அப்பா....
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்....
காதலி....
முத்தம் கொடுத்து அனுப்புவாள்....
தோழிதான்....
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்....!!!

****************************************

No comments:

Post a Comment