"
முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!
.
எல்லா கவிதையும்
காதலையே சுத்துதே!
.
காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?
.
என் காதலியை தான்!
.
அது தெரியும்..
யார் அவ?
.
என்னவள்!
.
அழகா இருப்பாளோ?
.
ஓரளவு சுமாரா!
.
ஓ.. சரி.. நான் கிளம்பறன்!
.
ஏன்… என்ன அவசரம்?
.
உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?
.
நான் அப்படி ஏதும் சொல்லலையே!
.
ஓ.. நீ அத வேற சொல்லனுமா?
.
சொன்னா தானே தெரியும்!
.
எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!
.
வேறெப்படி சொல்ல?
.
எனக்கு இப்போ உண்மை தெரியனும்!
.
என்ன உண்மை?
.
உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?
.
பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?
.
வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைத்தாள்!
.
சதுரங்கமாடிய காதல்
ராணியை மீட்ட களிப்பில்
நான்!!!
"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment