கள்ளச் சந்தையில்
சாராயம் விற்பவர்கள்
பெரும்பாலும் பெண்கள்
வரதட்சனை வழக்குகளில்
முதன்மை குற்றவாளிகள்
பெரும்பாலும் பெண்கள்
சீர்திருத்தப் பள்ளிகளில்
சிறுவர் சேரக் காரணம்
பெரும்பாலும் பெண்கள்
குழந்தைகளைக் கொன்று
தற்கொலைக்கு முயல்வது
பெரும்பாலும் பெண்கள்
ரங்கநாதன் தெருக்கடையில்
பொருட்களைத் திருடுவது
பெரும்பாலும் பெண்கள்
ஏல சீட்டு நடத்தி
பணத்தோடு மறைவது
பெரும்பாலும் பெண்கள்
வெடிகுண்டாய் ஒரு பெண்;
தொடர் குண்டு வெடிப்பில்
தொடர்புடைய ஒரு பெண்;
சரிநிகர் சமானமாக
ஆணுடன் போட்டி போட்டு,
மெதுவாக பெண்கள்
தங்கள் பெண்தன்மையை
இழந்து கொண்டிருப்பது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
December 7, 2009
இன்று....
உனக்கு நியாபகம் இருக்கிறதா,
சில வருடங்களுக்கு முன்பு,
இதே நாளில்
இரவு வெகு நேரம் ஆகியும்
வீட்டிற்கு போக மனம் இல்லாமல்
கண்களை மூடி
என் தோளிலே சாய்ந்து இருந்தாயே,
எனக்கு கூட கேட்காமல்
உனக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாயே,
நீ வைத்திருந்த குங்கமத்தில்
கொஞ்சம் எடுத்து
எனக்கு ஆசையாய் வைத்து விட்டாயே,
இரவினை கூட திட்டினாயே -ஏன் இப்படி
எங்களை தினமும் பிரிக்கிறாய் என்று,
இன்று....?
தவித்துக்கொண்டிருக்கிறேன் ஒரு முறையாவது
உன் முகத்தை பார்க்க முடியாதா என்று....
சில வருடங்களுக்கு முன்பு,
இதே நாளில்
இரவு வெகு நேரம் ஆகியும்
வீட்டிற்கு போக மனம் இல்லாமல்
கண்களை மூடி
என் தோளிலே சாய்ந்து இருந்தாயே,
எனக்கு கூட கேட்காமல்
உனக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாயே,
நீ வைத்திருந்த குங்கமத்தில்
கொஞ்சம் எடுத்து
எனக்கு ஆசையாய் வைத்து விட்டாயே,
இரவினை கூட திட்டினாயே -ஏன் இப்படி
எங்களை தினமும் பிரிக்கிறாய் என்று,
இன்று....?
தவித்துக்கொண்டிருக்கிறேன் ஒரு முறையாவது
உன் முகத்தை பார்க்க முடியாதா என்று....
புத்தி கெட்டவன் ....
நீ
என் வாழ்வில்
தென்றல்போல் வந்தாய்....
நான்
பூவாக மாறினேன்....
பின்பு நீ
புயலாக வந்து
புரியவைத்து சென்றாய்
நான்
புத்தி இழந்ததை....
என் வாழ்வில்
தென்றல்போல் வந்தாய்....
நான்
பூவாக மாறினேன்....
பின்பு நீ
புயலாக வந்து
புரியவைத்து சென்றாய்
நான்
புத்தி இழந்ததை....
தவிப்பை சுமந்து கொண்டு....
திரும்ப ஒரு முறையேனும் பார்க்க மாட்டாயா
என்று தான் திரும்பி திரும்பி பார்க்கிறேன் நான்....
எங்கு திரும்பினால் பார்த்து விடுவானோ....
என்று திரும்பாமலே போகிறாய் நீ
என்னை போலவே தவிப்பை சுமந்து கொண்டு....
என்று தான் திரும்பி திரும்பி பார்க்கிறேன் நான்....
எங்கு திரும்பினால் பார்த்து விடுவானோ....
என்று திரும்பாமலே போகிறாய் நீ
என்னை போலவே தவிப்பை சுமந்து கொண்டு....
Subscribe to:
Comments (Atom)