April 10, 2010

சண்டை

ஒவ்வொரு
சின்ன சண்டையின் முடிவிலும்
செல்ல கோபத்தோடு முத்தமிடுவாய்
கைகளில்....
இப்பொழுதெல்லாம்
நான் ஒரு பெரிய சண்டைக்கு வேண்டி
ஆயுத்தமாகி வருகிறேன்...!!!!

பொய்

பேசி கொண்டிருக்கும் போது ஒருநாள்

நிறைய பொய் சொல்ர
பொய் இல்லாமல் ஒரு கவிதை சொல் என்றாள்
கவிதை என்றாலே பொய் தானே தோழி என்றேன்
இல்லை பொய் இல்லாமல் சொல் என்றாள்
ம்ம்ம்ம்

எதிர்காலத்தை களவாடி நிகழ்காலத்தில் காட்டுபவள்
உன் போன்ற தோழி என்றேன்
ஏய் நிஜம்மா சூப்பர் டா என்றாள்
இல்லை இல்லை இது பொய் என்றேன்
போடா லூஸ் பையா என்றாள்