இறந்து போன நொடிப்பொழுது வேன்றுமென்றால்
அவளை முதலில் பார்த்த அந்த நொடி தான் வேண்டும்
இறந்து போன மணித்துளிகள் வேன்றுமென்றால்
அவளோடு பேசிய அந்த மணித்துளிகள் தான் வேண்டும்
இறந்து போன நாள் வேன்றுமென்றால்
அவளோடு இருந்த அந்த நாள் தான் வேண்டும்
இறந்து போன உயிர் வேண்டுமென்றால்
அவளுக்காக இறந்துப்போன என் உயிர் தான் வேண்டும்
அவளை மீண்டும் காதலிக்க....
August 17, 2010
August 8, 2010
மௌனமாய் நினைத்துக் கொண்டேன்....
என்றோ அவன்
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது....
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது....
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது....
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது....
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்....
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று...."
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்....
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று...."
Subscribe to:
Comments (Atom)